கேளம்பாக்கம் சாத்தாங்குப்பம் கிராம இளைஞர்களுக்கு விளையாட்டுத் துறையில் ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட் சீருடை மற்றும் கிரிக்கெட் பேட் வழங்கி வாழ்த்து.!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் வண்டலூர் செல்லும் பிரதான சாலையையொட்டி அமைந்துள்ள 01வதுவார்டு சாத்தங்குப்பம் கிராமத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுமார் மாலை சுமார் 06.30மணியளவில் இயங்கிவரும் சேலஞ்ச் கிரிக்கெட் கிளப் 03வதுஅணிகளுக்கு புதிய கிரிக்கெட் சீருடை மற்றும் புதியபேட் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் அணியின் கேப்டன் அப்பு தலைமை தாங்கினார் .துணைக்கேப்டன் ஆகாஷ் அனைவரையும் வரவேற்றார் . சிறப்பு அழைப்பாளராக கேளம்பாக்கத்தில் வசித்துவருபவரும் ,திமுக கட்சியின் ஜோதிநகர் கிளை கழகச்செயலாளரும் , தொழிலதிபரும் ,மக்கள் சேவகருமான K .A .D. அன்பு வருகைப்புரிந்தார் .
இவருக்கு அணியின் சார்பில் பட்டாசு வெடித்தும் சால்வையுடன் ஆள்யூர மலர்மாலையணிவித்தும் வரவேற்பளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சேலஞ்ச்கிரிக்கெட் அணியில் உள்ள அனைவருக்கும் வீரா்களின் பெயர்பதித்த கிரிக்கெட் சீருடைகளை மக்கள்சேவகர் அன்பு வழங்கி சிறப்புரையாற்றினார். அடுத்ததாக அணியினர்களுக்கு மூன்றுகிரிக்கெட் பந்து மற்றும் ஓரு கிரிக்கெட் பேட்டையும் வழங்கினார். சீருடை மற்றும் பேட் பந்து மொத்தம் ரூபாய் . 35,000மதிப்பில் கே.ஏ.டி. அன்பு அவர்களின் சொந்தசெலவில் அணியினர்கள் கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் அவரே நேரில் அழைத்து சென்று ஆடைரகங்களை தேர்வு செய்யவைத்து அதனைவரவழைத்து நேற்று வழங்கினார். இதுகுறித்து அவர்கூறுகையில் இன்றைய சூழ்நிலையில் இளைஞர்கள் தவறான பாதையில் ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் அவர்களை நல்வழிப்படுத்த சிலவிஷயங்களே உள்ளன.
அதில் ஓன்றுதான் விளையாட்டு கிரிக்கெட் , கபடி , வாலிபால் ,கால்பந்து உள்ளிட்ட ஓருசிலவிளையாட்டுகள் ஆகும் . அந்தவகையில் சாத்தங்குப்பம் கிராமத்தில் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடும் இந்தஅணியினர்களின் வேண்டுகோளுக்கு இணைங்க என்னால் முடிந்த சிறுஉதவி அவ்வளவுதான் . கேளம்பாக்கத்தில் உள்ள ஓட்டுமொத்த இளைஞர்களின் நலனுக்காக என்றும் என்னால் முடிந்த உதவியை நான் நிச்சயம் செய்துவருவேன் என்று தெரிவித்தார். இதுகுறித்து அங்கிருந்த இளைஞர்கள் கூறுகையில் அண்ணன் அன்பு அவர்களிடம் விளையாட்டாக எங்கள் அணியின் வீரா்கள் வெளியிடங்களுக்கு சென்று விளையாட ஓரேமாதிரியான சீருடை இல்லை எனவே நீங்கள் முடிந்தால் வாங்கிதரவும் என்றுகோரிக்கை வைத்தோம் . நாங்களும் சொல்லிவிட்டு வந்துவிட்டோம்,ஆனால் அண்ணன் அன்பு அவர்கள் எங்களை மறுநாளே நேரில் அழைத்து அணியின் விவரங்களை கேட்டறிந்து நாங்கள் எதிர்பாரதவகையில் தரமான சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களை வாங்கிதந்துள்ளார்.
அவருக்கு என்றும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் அவருக்கு எங்களின் அணியின் சார்பில் நன்றியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர்கள். கேளம்பாக்கம் ஊராட்சியில் கே.ஏ.டி. அன்பு பல்வேறு விளையாட்டு துறை அணியினர்களுக்கு சீருடை , விளையாட்டு உபகரணங்கள் ,விளையாட்டுப்போட்டி பரிசுகள் எனஇரண்டு இரண்டு இலட்சரூபாய்க்கு மேல் வழங்கியுள்ளார் மேலும் தொடர்ந்து வழங்கியும் வருகிறார் . இவரின் ஓரேநோக்கம் இளைஞர்கள்யாரும் தவறான வழியில் செல்லக்கூடாது என்பதாகும் எனஅவருடன் பயணிக்கும் ஓருவர் தெரிவித்தார்.கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து எந்தவிதமான பிரதிநலனும் பாராமல் இளைஞர்களுக்கு பல்வேறுஉதவிகள் செய்துவரும் செயலால் கேளம்பாக்கம் ஊராட்சி இளைஞர்களை KAD. அன்பு தன்பால் இழுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் சாத்தங்குப்பம் சேலஞ்ச் கிரிக்கெட் அணியினைச்சேர்ந்த சஞ்சய் , பார்த்தி ,சலீம் ,ராஜ் , குமார் , பவானஸ் , மணி ,யுவராஜ் , விக்காஸ் , மணிகண்டன் , மார்க்மணி , ஈஸ்வர் , சரண் , மோனிஷ் , கதிர் , சக்தி ,ஜெகதீஷ் , பாபா மற்றும் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்கள். இந்நிகழ்ச்சியினை ஷர்மா ஒருங்கிணைத்து செய்திருந்தார் .தங்களின் சுயநலத்திற்காக இளைஞர்களை தவறான வழியில் கொண்டு செல்லும் நபர்களுக்குஇடையே விளையாட்டுத்துறையில் தேவையானதை செய்துகொடுத்து வரும் மக்கள்சேவகர் K .A. D.அன்புக்கு தங்களின் நன்றிளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதாக கேளம்பாக்கம் ஊராட்சி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்கள் .
செய்தியாளர் மூர்த்தி

Comments
Post a Comment