Skip to main content

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில், 51-வது அகில இந்திய திராவிட மொழியியலாளர் மாநாடு.!.

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் 51-வது அகில இந்திய திராவிட மொழியியலாளர் மாநாடு,3-நாட்கள் நடைபெறுகிறது. மொழியியல், இலக்கியம், ஒப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு இவற்றின் சமகால ஆய்வுகள் பற்றிய மாநாடாக இது நடக்கிறது என்று துணைவேந்தர் திருவள்ளுவன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் வரும்,27-ம் தேதி முதல் 29.ம் தேதி வரை மூன்று நாட்கள் இந்த மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டின் நோக்கம் மொழியியல் கற்றல், கற்பித்தல், தேசிய கல்விக்கொள்கை, மாநிலக் கல்விக் கொள்கை இலக்கியம், ஒப்பிலக்கியம். மொழிபெயர்ப்பு தொடர்பாக, இன்றைய நவீனத் தொழில்நுட்பக் காலத்தில் நடைபெற்று வரும் ஆய்வுகள், அதன் போக்குகள் ஆகியவற்றை இளம் தலைமுறையினரின் பார்வைக்குக் கொண்டு வருவதே ஆகும்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இந்த மாநாடு 2 -வது முறையாக நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 1983-ஆண்டில் 13-வது அனைத்து இந்திய திராவிட மொழியியலாளர்கள் மாநாட்டினை, தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்தி முத்திரை பதித்தது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரும், உலகின் சிறந்த மொழியியலாளர்கள் வரிசையில் முதல்வரிசையில் இருந்த அறிஞருமான முனைவர், வ.ஐ.சுப்ரமணியம் அவர்களின் சிந்தனையில் உதித்ததுதான் இந்த "அகில இந்திய திராவிட மொழியியலாளர் கூட்டமைப்பு".உலகெங்கும் வாழும் மொழியியல் அறிஞர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, திராவிட மொழிகளில் பொதிந்திருக்கும் வளங்களையும், ஆற்றல்களையும் வெளிக்கொணர்வது மற்றும் திராவிடமொழிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு மேம்படுத்துதல் என்ற நோக்கங்களுக்காகவே இக்கூட்டமைப்பை வ.ஐ.சுப்ரமணியன் தொடங்கினார்.

அவருடைய நல்முயற்சியில் கர்நாடகப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறைத்தலைவரும், பேராசிரியருமாகத் திகழ்ந்த, முனைவர், ஹிராமத், திருப்பதி வெங்கடேசுவரா பல்கலைக்கழக மொழியியல் துறை முன்னாள் தலைவர், மகாதேவ சாஸ்திரி ஆகியோர் இணைந்து 1971-ம் ஆண்டில், அகில இந்திய திராவிட மொழியியலாளர் கூட்டமைப்பின் முதல் மாநாட்டினை நடத்த முடிவெடுத்து, அதைத் திருவனந்தபுரத்தில் வெற்றிகரமாக நடத்திக் காட்டினர்.இம்மாநாட்டில் திராவிட மொழியியலுக்காக முதல் ஆய்விதழும் வெளியிடப்பட்டது. அந்த ஆய்விதழில் உலகின் பல்வேறு பகுதிகளின் அறிஞர்கள் திராவிட மொழிகள் குறித்த கட்டுரைகளை எழுதி, சிறந்ததொரு தொடக்கத்தை ஏற்படுத்தி வைத்தனர். இந்நிலையில்,1977-ம் ஆண்டு பன்னாட்டுத் திராவிட மொழிகள் நிறுவனம் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டது. இதன் சார்பாகவும் ஆய்விதழ்கள் வெற்றிகரமாகக் கொண்டு வரப்பட்டு, உலக மொழியியலாளர்கள் சங்கமிக்கும் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகப் பரிணமிக்கத் தொடங்கியது.திராவிட மொழியியல் கூட்டமைப்பின் தற்போதைய இயக்குனராக கேரளப் பல்கலைக்கழக மொழியியல் துறை முன்னாள் தலைவர் ஜி.கே.பணிக்கர், என்.பி.உன்னி, தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் கி.கருணாகரன் ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடத்தி வருகின்றனர். 

இந்த மாநாட்டிற்கு உலக நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆய்வாளர்கள் வருகை தரவுள்ளனர். நூற்றுக்கணக்கானக் கட்டுரையாளர்கள்,4- தனி அமர்வுகளில் ஆய்வுத் தாளைச் சமர்ப்பிக்க உள்ளனர். வெளிநாடுகளில் இருந்தும் ஆய்வுத்தாள் வாசிப்பதற்கென்று இணையவழி அமர்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ,183- வெளியீடுகளை அரை நூற்றாண்டுக்காலமாக வெளியிட்டுள்ள திராவிட மொழியியல் கூட்டமைப்பின் சேகரிப்பில் ஏறத்தாழ 43000- நூல்கள் எதிர்கால இளந்தலைமுறைக்காகத் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. திராவிட மொழியியல் கூட்டமைப்பின் சார்பில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் ஒரு புத்தகக் கண்காட்சியும் இடம் பெறவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்,பேட்டியின் போது களப்புலத்துறை தலைவர் இளையாப்பிள்ளை, வளர் தமிழ்புல துறைத்தலைவர் குறிஞ்சி வேந்தன், சுவடிகள் புல துறைத்தலைவர் கண்ணன், துணைப்பதிவாளர் பன்னீர்செல்வம், மொழியியல் துறைத் தலைவர் மங்கையர்கரசி, மக்கள் தொடர்பு அதிகாரி முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


செய்தியாளர் வேங்கை குணா 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...