சென்னை செங்குன்றத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் புனரமைக்கப்பட்டு அங்கு 61 அடி உயரமுள்ள ஸ்ரீ அம்பிகை கருநிலை ஸ்தூபி, கோபுரம் அமைக்கப்பட்டு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.முன்னதாக யாகசாலையில் விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம்,நாடி சந்தனம் உள்ளிட்ட நான்கு கால பூஜைகள் நடைபெற்று பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கும்ப கலசத்தில் கிராம பெரியவர்கள் முன்னிலையில் புறப்பட்டு அம்பிகை கருணை நிலைஸ்தூபிக்கும்,முகப்பு கோபுரத்திற்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து மூலமூர்த்தி அங்காளம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் பல்வேறு வண்ண மலர்களாலும் வாசனை திரவியங்களாலும் அலங்கரிக்கப்பட்டு மகா தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் செங்குன்றம் சுற்று வட்டார பொதுமக்கள் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் மூன்று நாட்களும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.இவ்விழாவினை நாரவாரிக்குப்பம் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஆலய விழா குழு நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள், வியாபார நண்பர்கள் காவல்துறையினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment