24-25ம் கல்வியாண்டுக்கான 1 முதல் 3 வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைப்பெற்றது.!
தூத்துக்குடி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் திருமதி ரெஜினி மற்றும் வானரமுட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் ஆண்டோ பூபால் ராயர் ஆகியோரின் செயல்முறைகளின் படி 2024-25ம் கல்வியாண்டு 1 முதல் 3 வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் முதல் பருவத்திற்கான ஒன்றிய அளவிலான பயிற்சி தூத்துக்குடி நகர்ப்புறம் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 25.06.24 மற்றும்26.06.24 தேதிகளில் நடைபெறுகிறது . முதல் நாள் பயிற்சியை இன்று (25.6.24) தூத்துக்குடி நகர்ப்புற வட்டார கல்வி அலுவலர் திருமதி .சரஸ்வதி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் முனைவர் திருமதி .தனலட்சுமி , மற்றும் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் திருமதி ஜாய் விக்டோரியா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இப்பயிற்சியில் 147 தொடக்க நிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .
8 ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டு எண்ணும் எழுத்தும் தமிழ் , ஆங்கிலம், கணக்கு குழு செயல்பாடுகள், தொழில்நுட்பத் துணை , ஐயங்களும் தெளிவுகளும், வகுப்பறையில் திறன் பலகை பயன்பாடு ஆகியன குறித்து பயிற்சி அளித்தனர். பயிற்சியினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (தொடக்க நிலை) திருமதி .முத்து ஸ்ரீ வரமங்கை பார்வையிட்டார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் திருமதி .தனலட்சுமி , நகர்ப்புற வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) திருமதி .பார்வதி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.
செய்தியாளர் அ. ரவி

Comments
Post a Comment