சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலக அமைதிக்காக கூட்டு யோகா நிகழ்ச்சி தூத்துக்குடியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான முத்து நகர் கடற்கரையில் நடைபெற்றது.பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் என்ற அமைப்பு சார்பில் இந்த சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இந்திய நாட்டின் பழமையான யோக முறைகள் இன்று உலகை முழுமையாக ஈர்த்து வருகின்றது.பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முயற்சியின் காரணமாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21ஆம் தேதி சர்வதேச யோக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.யோகா என்பது அலை பாயாக்குடிய மனதை ஒருமுக படுத்த உதவுகிறது, நீங்களும் திருப்பதி அடைந்து, உங்களை சார்ந்தவர்களையும் திருப்பதி படுத்த முடியும் என எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் சூரிய நமஸ்கார யோகாசனத்தை நடனமாக செய்து காண்பித்தனர் .அதனை தொடர்ந்து. பள்ளி மாணவ, மாணவியர்கள் தனுராசனம், கருடாசனம், மரகத ஆசனம், சக்கர ஆசனம், பூரண தனுராசனம், விருச்சிக ஆசனம், ஏகபாத சிரசாசனம், பூரண சிரசாசனம், துதிபாத சக்கர ஆசனம், மஜ்ஜியாசனம், சிரசாசனம் என பல்வேறு வகையான ஆசனங்களை செய்து காண்பித்தனர்.ஞாயிற்றுக்கிழமை மாலை பொழுது போக்குவதற்காக கடற்கரையில் குவிந்த பொது பொதுமக்களிடம் இந்த யோகாசன நிகழ்ச்சியானது விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது

Comments
Post a Comment