ஊத்துக்கோட்டை C.S.I. தேவாலயத்தின் பிராத்தனை ஜெபகோபுரம் மர்ம நபர்களால் உடைப்பு.! நடவடிக்கை எடுக்ககோரி C1.காவல் நிலையத்தில் புகார்.!
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் விவேகானந்தா சாலை முதல் தெருவில் C.S.I.வெற்றி சிலுவை தேவாலயம் 2009 ஆம் ஆண்டு கட்டப்பட்டு வழிபாட்டுத்தலமாக செயல்பட்டு கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆலயத்தின் முகப்பில் பொதுமக்களின்குடும்ப பிரச்சினைகளுக்காகவும் அவர்களின் நலன்களுக்காகவும் பிராத்தனை கோபுரம் கட்டபப்டு கிறிஸ்தவரின் புனித நூலான வேதாகமம் அதிலே வைக்கப்பட்டு கண்ணாடியால் மூட பட்டிருந்ததாக கூறுகின்றனர்.
தினமும் அவ்வழியாக வருகிறவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி தங்கள் பிள்ளைகளுக்காகவும் குடும்ப நலனுக்காகவும் பிரார்த்தனை செய்து விட்டு செல்வதாகவும் சொல்ல படுகிறது இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர்களால் ஜெப கோபரத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு அதிலிருந்த புனித நூலான வேதாகமம் சூறையாடபட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியுற்ற சபை ஆயர் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊத்துக்கோட்டை C1காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுககிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.
செய்தியாளர் துரை பன்னீர் செல்வம்

Comments
Post a Comment