அமைச்சர் தா மோ அன்பரசன் முன்னிலையில் மாற்றுக் கட்சியைச் சார்ந்த 25க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர்.!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் வசித்துவரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியைச்சேர்ந்தவர்கள் ,மற்றும் புதியவர்கள் என சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் அங்கம் வகித்துவரும் கட்சிபதவிகளிலிருந்து பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர்களிலிருந்து விலகி தங்களை திராவிட முன்னேற்ற கழகம் கட்சியில் இணைத்துக்கொள்ளும் நிகழ்ச்சி இன்று காலை சுமார் 10.00மணியளவில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழகச்செயலாளரும் , முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் , ஒன்றியக்குழுப் பெருந்தலைவருமான எஸ்.ஆர்.எல் .இதயவர்மன் முன்னிலைவகித்தார் கழகத்தின் காஞ்சிவடக்கு மாவட்ட கழகச்செயலாளரும் , தமிழ்நாடு குறுசிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா. மோ. அன்பரசன் தலைமையில் அஇஅஇதிமுக கட்சியினர்கள் மற்றும் புதியவர்கள் ஆகியோர்கள் தங்களை திமுக கழகத்தில் இணைத்துக் கொண்டனர்கள் .
புதியதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கட்சிவேட்டிஅணிவித்து வரவேற்றார்.இதனைத்தொடர்ந்து கட்சியில் இணைந்தவர்கள் பூங்கொத்து வழங்கியும் , சால்வையணிவித்தும் மரியாதை செலுத்தினார்கள் . கட்சியில் சேர்ந்தவர்கள் விவரம் அஇஅதிமுக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக அம்மாபேரவை இணைச்செயலாளர்கோ. சுமன் , இளைஞரணி ம.எட்வின் , வழக்கறிஞர் அணி சி. சுனில் ,சே.ராம்கி ,வே. ராபின் , வே.அர்க்லாஷ் ,ஜோதிநகர் சோ.விநாயகம் , கு. சரவணன் ஆகியோர்களும் ஆல்பின் ,அருண் ,உதயா , நாகராஜ் , சர்மா , வினித் , மருதுபாண்டி , நவீண் , விஜி ,நவீண் , கெவின் , சுதர்சன் , எட்வின் , பிராங்களின் உள்ளிட்டவர்களும் இணைந்தனர்கள் . இந்நிகழ்வின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக மற்றும் கேளம்பாக்கம் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்கள் .
இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கேளம்பாக்கம் ஊராட்சி திமுக கிளை கழகச்செயலாளரும் , மக்கள்சேவகருமான கே. ஏ.டி.அன்பு செய்திருந்தார் .கேளம்பாக்கத்தில் இவர் தொடர்ந்து கட்சி ரீதியாக பொதுமக்கள் சேவை செய்துவருவதால் பொதுமக்களும் இளைஞர்களும் இவருக்கு முழுஆதரவினை அளித்துவருகின்றனர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தியாளர் மூர்த்தி

Comments
Post a Comment