திருவையாறு வட்டார காங்கிரஸ் சார்பில், இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின்,54-வது பிறந்தநாள் விழா, திருவையாறு பேருந்து நிலையம் அருகே,19.6.2024 இன்று காலை 11 மணியளவில் கொண்டாடப்பட்டது. அதன் பின்பாக, பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சீரும், சிறப்போடு கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு திருவையாறு வட்டார காங்கிரஸ் தலைவர், என்.ராஜலிங்கம் தலைமை தாங்கினார், தஞ்சை வடக்கு மாவட்ட பொருளாளர், வழக்கறிஞர், ஆர்.எம். ராஜு முன்னிலை வகித்தார். நடைபெற்ற இந்த நிகழ்வில் நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இலக்கிய அணி தலைவர் சுரேஷ், மாணிக்கம், நமச்சிவாயம், சேகர், பட்டுசுப்ரமணியன், மணிகண்டன், வெங்கடேஷ், ஆறுமுகம், திருக்காட்டுப்பள்ளி இராஜேந்திரன், பஞ்சாபிகேசன், பார்த்திபன், கனகராஜ், திருவையாறு வட்டார காங்கிரஸ், ஏனைய இன்னாள், முன்னாள் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர், நிகழ்ச்சியின் நிறைவாக பசுபதி ராஜா நன்றி கூறினார்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment