திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுவாயல் கவரப்பேட்டை பெத்திகுப்பம் பகுதியில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தமிழகத்தில் அதிக அளவு 5, 72,155 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை ஒட்டி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் மேல தாளங்கள் முழங்க பல்வேறு பகுதிகளுக்கு சென்று நன்றி தெரிவித்தார் அப்போது அவருக்கு பட்டாசு வெடித்தும் மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 100 நாட்கள் பணியில் 400 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் முறையாக பணிகள் வழங்கவில்லை எனவும் மகளிர் மகளிர்க்கு மாதம் 8,000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
. அப்போது நன்றி தெரிவித்து பேசிய சசிகாந்த் செந்தில் பொதுமக்களோடு இருந்து ஐந்து ஆண்டு காலம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன் என்றும் பாராளுமன்றத்தில் நாங்கள் 240 பேர் செல்கிறோம் கலாட்டா செய்வோம் என்றும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் நன்றி அறிவிப்பில் பங்கேற்காதது குறித்து பேசுகையில் நன்றி அறிவிப்பிற்கு யாரையும் அழைக்கவில்லை அவர்களாகவே தானாக வந்து சிறப்பாக காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக மாவட்ட கழகச் செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் ஒன்றிய கழகச் செயலாளர் கி வே ஆனந்தகுமார் மாவட்ட குழு தலைவர் உமா மகேஸ்வரி அவைத்தலைவர் பகலவன் முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சிதம்பரம் வழக்கறிஞர் சம்பத் முத்துக்குமார் துளசி நாராயணன் கோபால் நெடுஞ்செழியன் செல்வ சேகரன் திருமலை விக்னேஷ் உதயன் உள்ளிட்ட கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment