தஞ்சைமாவட்டத்தின் சார்பில், 21.06.24 அன்று மாலை 4:00 - மணிக்கு, தமிழக முதல்வர் அவர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில், மாலை நேர தர்ணா ஆர்பாட்டம், தஞ்சைமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர்,A.வீராச்சாமி தலைமையில் நடைபெற்றது.அனைத்து மாவட்ட நிர்வாகிகளான: எஸ்.கருணாநிதி, கே.இராமாமிர்தம், ஆர்.மகாலெட்சுமி, எஸ்.கலா ஏ. நாவலரசன், கே.மூத்துராமன், ஆர்.மதிவாணன். ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர், மாவட்ட செயலாளர் இரவிச்சந்திரன் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர், A. ரெங்கசாமி, திருச்சி மாவட்ட செயலாளர் C.A பாபு, திருவாரூர் மாவட்ட செயலாளர், C. பிரகாஷ். தஞ்சை வடக்கு வட்ட செயலாளர், சி. அஜெய் ராஜ், தெற்கு வட்ட செயலாளர், ஏ. தமிழ்மாறன், ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி, மு. மாவட்ட செயலாளர், முருகன், த. புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க பொதுச் செயலாளர், A.ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்கள். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர்,எஸ். கோதாண்டபாணி நிறைவுரையாற்றினார், நிகழ்ச்சியின் நிறைவாக மாவட்ட பொருளாளர்,ஆர். மதியழகன் நன்றி கூறினார். மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளரிடம் கோரிக்கை மகஜர் வழங்கபட்டது.செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment