தஞ்சை, திருநெல்வேலியில் சாதி மறுப்பு திருமணம்செய்துகொண்ட, மதன்குமார்-தாட்சாயணிக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட கோரியும், நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை தாக்கிய கும்பலை கொண்ட தடுப்பு சட்டத்தில் கைது செய்யகோரியும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டுமெனவும், திண்டுக்கல் மாவட்டத்தில் அருந்தியர்களுக்கு தொடர்ந்து நடக்கும் சாதிய படுகொலை தீண்டாமை வன்கொடுமையை கண்டித்தும், திராவிடத் தமிழர் கட்சி சார்பில்,(24.6.2024) நேற்றைய முன்தினம் மாலை,5:00- மணியளவில், பனகல் கட்டிடம் முன்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.வீ. ரெங்கராஜ் தலைமை தாங்கினார், மாவட்ட அமைப்பு செயலாளர் கே.சண்முகம், மாவட்ட பொருளாளர்,எம். தாமோதரன், மாவட்டத் துணைத் தலைவர்,கே. சம்பந்தம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நீலகிரி பகுதி செயலாளர்,செல்வ சுப்ரமணி ஆசியோர்கள் முன்னிலை வகித்தனர், திராவிட தமிழர் கட்சி மாநில அமைப்பு செயலாளர், விடுதலை வீரன் துவக்க உரையாற்றினார். கீதா மாவட்ட செயலாளர், சி. அமர்சிங், தமிழ்நாடு தீண்டாமை முன்னணி சிபிஎம், சின்ன பாண்டியன், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்,ஏ.ஜேம்ஸ், இடதுசாரி பொதுமேடை ஒருங்கிணைப்பாளர், துரை.மதிவாணன், லிசிக முன்னாள் மாவட்ட செயலாளர் சொக்காரவி, மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா உள்ளிட்டோர்கண்டன உரையாற்றினர், திராவிட தமிழர் கட்சி மாநில ஆட்சி மன்ற குழு தலைவர், மூத்த வழக்கறிஞர்,பெ. இளமதி கண்டன நிறைவுறையாற்றினார்.இதில் இந்நாள், முன்னால் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment