கும்முடிபூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் வாயில் கூட்டம் வாயில் கூட்டம் நடத்தி ஆலோசனை .!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பேட்டையில் அமைந்துள்ள வினோ மெக்கானிக் காற்றாலை உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகபணிபுரியும் நிரந்தரப் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை மேலும் அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் வாயில் கூட்டம் நடத்தி ஆலோசனை மேற்கொண்டு தொழிற்சாலை நிர்வாகம் விரைந்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இதில் தொமுச பொதுச் செயலாளர் மணிபாலன் மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன் மற்றும் தொழிற்சங்க செயலாளர் எஸ் வேலு சிறப்பு தலைவர் எஸ் ராஜசேகரன் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பாஸ்கரன் செயலாளர் சிவக்குமார் பொருளாளர் மூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment