தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில எஸ்சி/எஸ்டி, பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் ஆகியோரது ஆணைக்கிணங்க, முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களின் 116-வது பிறந்தநாள் விழா, அம்மாபேட்டை புலவர் நத்தம் கீழ் பாதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (18.6.2024) இன்று நடைபெற்றது.(இப்பள்ளியானதுகக்கன் அவர்கள் அமைச்சராக இருந்த காலத்தில் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதே).
இந்நிகழ்ச்சிக்கு தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்/எஸ்டி பிரிவு தலைவர் அருண் சுபாஷ் தலைமை தாங்கினார், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார், கக்கன் பிறந்த நாளான, (18.6.2024) இன்று அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்பாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து அப்பள்ளியில். பயிலும் மாணவ, மாணவிகள்,65-பேருக்கு நோட்டு, பேனா, பென்சில், வாய்ப்பாடு உள்ளிட்டப் பொருட்கள் வழங்கப்பட்டது. நடைபெற்ற இந்த நிகழ்வினை அம்மாப்பேட்டை, எஸ்சி/எஸ்டி பிரிவு வட்டார தலைவர் வேலுச்சாமி மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார், இதில் தஞ்சை வடக்கு மாவட்ட எஸ்சி/எஸ்டி பிரிவுபொதுச்செயலாளர்,பி.கே. சரவணன், பள்ளி ஆசிரியர்கள், மற்றும்மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment