தஞ்சையில் நடைப்பெற்ற மூத்த குடிமக்கள் நல சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்திற்கு தென்னை விஞ்ஞானி,டாக்டர். வா.செ.செல்வம் தலைமை தாங்கினார், நிறுவனர், புலவர் ஆதி. நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார், பொதுச் செயலாளர் பாஸ்கர் வரவேற்புரையாற்றினார், துணைச் செயலாளர் துரை. கோவிந்தராஜ், துணைத் தலைவர் முத்துக்குமரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.80-வயதை நிறைவுச் செய்யும் சங்கத்தின்செயற்குழு உறுப்பினர் சுந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்பு செய்யப்பட்டது. இக்கூட்டத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களான: தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து, புதிய பேருந்து நிலையத்திற்கு மேரிஸ் கார்னர் வழியாக நாஞ்சிக்கோட்டை சாலை, இ.பி. காலனி, கெஜலட்சுமி நகர், வழியாகச் சென்று கொண்டிருந்த மினி பேருந்துணை, சரியாக நாள் ஒன்றுக்கு மூன்று முறையாவது தவறாமல் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும். என்று மாவட்ட ஆட்சியரை இச்சங்கம் கேட்டுக்கொள்கின்றது.
பொதுவாகவே நகரத்தின் எல்லைக்குட்பட்ட புறநகர் பகுதிகளில் நாய்களின் தொந்தரவு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாநகராட்சியை கேட்டுக் கொள்கின்றது. 25.6.2024 அன்று நடைபெறப் போகும் சங்கத்தின் மணமகிழ் சங்க கூட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் சிலம்பாட்ட மாணவர்களுக்கான சீருடை தொகையினை வழங்க இருக்கும் பொதுச் செயலாளர், ஆர்.பாஸ்கர் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் கரம்பயம் ஊராட்சி மன்ற தலைவராய் பொறுப்பு வகிக்கும், திருமதி. மேனகா அனந்தகுமார் அவர்கள் தனது கிராமத்தின் குடிநீர் பஞ்சத்தைப் போக்க, தண்ணீர் லாரி மூலமாக தன் சொந்த செலவில், தண்ணீர் விநியோகம் செய்து வருவதை பாராட்டி அன்னாருக்கு விருது சான்றிதழ் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் வழக்கறிஞர்,பெ. சந்திரபோஸ்,ஏ.டி. இராஜா சுப்பிரமணியன்,கே. ஆர்.ஜி. காசிராஜன், பேராசிரியர் மாஸ்டர் சுரேஷ் மற்றும் பலர்கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment