திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த பாதாள கங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலின் 15 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டலுடன் துவங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது.பத்து நாட்கள் கோலாகலமாக விழா நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மேளதாளம் முழங்கிட அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்பாள் கம்பீரமாக வீற்றிருக்க கரகம், அக்னிச்சட்டி ஏந்தியவர்கள் அக்னி குண்டம் இறங்கினர்.இதையடுத்து காப்பு கட்டி விரதமிருந்த 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தியுடன் அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.விழாவின் நிறைவாக அம்மன் வீதிவுலா நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் ஆர்த்தி ஹரி பாபு நீலகண்டன் ராமலிங்கம் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கோவிலில் பொன்னேரி தீயணைப்பு துறை அதிகாரி சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீ தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment