உலகத் திருக்குறள் மையம் சாா்பில் தூத்துக்குடி சி எம் மேனிலைப்பள்ளியில் 18.06.2024 செவ்வாய்கிழமை மதியம் மாணவ மாணவியா்களிடையே திருக்குறளியா் அணி புதிதாக துவங்கப்பட்டது தலைமை திருமதி வள்ளியம்மாள் அவா்களும் திருமதி சங்கரேசுவாி திருமதி வள்ளியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தாா்கள்.
வருகின்ற ஜீலை மாதம் முதல் வாரம் நடைபெறும் திருக்குறள் வினாடி வினா போட்டி காண் ஔி மூலமாக நடைபெற இருப்பதால் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பயிற்சி நடை பெறுகிறது .அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் பயிற்றுனராக திருக்குறள் அன்பழகன் செயல்பட்டாா்கள். இன்றைய தொடக்க நாள் நிகழ்வில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியா்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.
செய்தியாளர் அ. ரவி

Comments
Post a Comment