பொன்னேரி சின்னக்காவனம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த 108 ஈஸ்வரர் கோவில் திருக்குளத்தை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனு.!
திருவள்ளூர் மாவட்டம் சின்னக்காவனம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த 108 ஈஸ்வரர் கோவில் திருக்குளத்தை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பொன்னேரி நகராட்சி நான்காவது வார்டு உறுப்பினர் பரிதா ஜெகன் இன்று பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தார்.
மேலும் 20க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா முதியோர் உதவித்தொகை வழங்க பயனாளிகள் சார்பில் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது.
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment