இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் 54 வது பிறந்தநாள் விழா, தஞ்சை பழைய பேருந்து நிலையத்தின் அருகில், நேற்றைய தினம் மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர், பி.ஜி. இராஜேந்திரன் தலைமை தாங்கினார், மாநகர மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் லட்சுமி நாராயணன், மாநில செயற்குழு உறுப்பினரும், பொறியாளருமான ஜேம்ஸ், மாநில செயற்குழு உறுப்பினர், வயலூர் இராமநாதன், சொக்க ரவி, வல்லம் பாட்ஷா, கோவி. மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்வில் வழக்கறிஞர் ஜான்சன் வர்த்தக பிரிவு தலைவர் சந்திரசேகரன், பொதுச் செயலாளர்கள்: கரந்தை கண்ணன், செந்தில் சிவகுமார், சேவா தல தலைவர் திருஞானம், பூதலூர் அன்பழகன், ஆறுமுகம். வீரமோகன், கோவிந்தராஜ்,குருசாமி, பீட்டர்,ஜி. கண்ணன், சௌந்தர்ராஜன், சச்சிதானந்தம், சாந்தா ராமதாஸ்,சுப்பு தங்கராசு, இயேசு, சுரேந்தர், பூதலூர் இராமமூர்த்தி, அசோக், மாரியம்மன் கோவில் குமாரசாமி, அருண் சுபாஷ், ராஜு, இன்னாள் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன் பின்பாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய கூட்டணியில் இடம் பெற்றுள்ள தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும், தொண்டர்களும், தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்வதற்காக கடுமையாக உழைத்து,பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்து, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டமைக்காக அனைவருக்கும் முரசொலி அவர்கள்நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
முரசொலி அவர்கள் பேசுகையில்: என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் பொறுப்பாளர்களும் தொண்டர்களுக்கும் என்னுடைய நன்றியினை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை நேரில் வந்து சந்திக்கலாம் உங்களுடைய கோரிக்கைகள் என்னவாக இருந்தாலும் அதனை நிறைவேற்ற கடமைப்பட்டவனாக இருக்கின்றேன் என இவ்வாறு கூறினார்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment