அரசு பண்ணையில் மாடு முட்டி இறந்த கோவிந்தராஜ் குடும்பத்திற்கு,ரூ.10-லட்சம் இழப்பீடும், அரசு பணியும் வழங்க ஏஐடியூசி கோரிக்கை.!
தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டை அரசு உயரின கால்நடை பெருக்க பண்ணையில், பத்தாண்டுகளுக்கு மேலாக தினக்கூலியாக பணிபுரிந்து வரும், சேதுராயன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் வயது(45) நேற்று(19-6-24) பண்ணையில் மாடு பராமரிப்பின்போது மாடு முட்டி இறந்துவிட்டார். இவருக்கு வயதான தாய்,மனைவி மற்றும் 13-வயதில் மகனும், 10-வயதில் மகளும் உள்ளனர்.
இறந்த கோவிந்தராஜ் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு,ரூ.10-லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும், எதிர்காலத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்,அரசு பண்ணையில் எவ்வித பாதுகாப்புமின்றி பணிபுரிகின்ற பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றபட வேண்டும், பல ஆண்டுகளாக தினக்கூலிகளாக பணிபுரிந்து வருகின்ற பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்று ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment