திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தடப்பெரும்பாக்கம் ஏரியில்அரசு சவடு மண்குவாரியில் மண் லாரிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் தங்கள் பகுதியில் கனமழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தங்கள் பகுதியில் மண்ணைக் கொட்டி நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண் லாரிகளை சிறை பிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த பொன்னேரி காவல்துறையினர் அவர்களிடம் சமரசம் மேற்கொண்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் தாழ்வான பகுதிகளில் மண்ணைக் கொட்டி சமப்படுத்த வேண்டும் எனவும் நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment