திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் மேலும் விவசாயிகளுக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்காததால் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர் இது குறித்து மின்வாரியத்திடம் பலமுறை முறையிட்டும் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படாத நிலையில் போதிய மின் ஊழியர்கள் நியமிக்க வேண்டும் மின்உபகரணங்களை வழங்க வேண்டும் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் புதிய துணை மின் நிலையத்தை ஏமைக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரியத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரச்சனைக்கு தீர்வு காணப்படாவிட்டால் இனிமின்கட்டணத்தை செலுத்தாமல் ஒத்துழையாமல் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர். பின்னர் பேரணியாக சென்று பொன்னேரி மின்வாரிய செயற்பொறியாளர் அவர்களிடம் மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்தில்மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயன் மாவட்ட செயலாளர் கோபால் மாவட்ட குழு உறுப்பினர் எஸ் எம் அனீப் மதன் தவமணி சேகர் வழக்கறிஞர் காளமேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment