தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் மாபெரும் வெற்றி விழாவை முன்னிட்டும் சென்னை வடகிழக்கு மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் எஸ்.என்.கோதண்டன் ஏற்பட்டில் 1000க்கும் மேற்பட்டோருக்கு கறி விருந்து சாப்பாடு வழங்கும் நிகழ்ச்சி புழல் சூரப்பட்டு இந்திரா நகர் டேங்க் அருகே நடைபெற்றது.சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் தலைமை தாங்கி கறி விருந்தை ஏழை எளியவருக்கும்,பொதுமக்களுக்கும் வழங்கினார்.
இதில் மாதவரம் மண்டல குழு தலைவர் எஸ்.நந்தகோபால், மாதவரம் தெற்கு பகுதி செயலாளர் ஜி.துக்காராம் பெருநகர சென்னை மாநகராட்சி 32 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் அவை தலைவருமான இ.ஏழுமலை, 32 வது வட்டக் கழக செயலாளர் எம்.சரவணன் ஆகியோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் 32 வது (அ) வட்ட செயலாளர் துரை ஸ்ரீஇராமுலு, 33வது வார்டு மாமன்ற உறுப்பினர் குட்டி மோகன், 32 வது வட்ட திமுக நிர்வாகிகள் ரமணன், விஜயலட்சுமி ஆனந்த், சிவில் எம்.செல்வம், தேவி கௌதமன், கே.பத்மநாபன், கௌதம் பாலாஜி, ஆர்.தேவன், எஸ்.ஹேமாவதி, எம்.சேகர், சி.எல்.உதயகுமார், ஜே.நரசிம்மன், எம்.ஹரி பாபு, வி.எம்.சாரதி, ஆர்.ஸ்ரீதரன், ஆர்.எஸ்.ரவிச்சந்திரன், வி.கௌதம், ஆர்.சுந்தர்ராஜ் எஸ்.கே.அன்பழகன், இ.ராமச்சந்திரன், ஆர்.முருகன். ஆர்.கேதர்நாத், எஸ்.வீரமணி, பி.மாரிமுத்து, சி.ஆனந்த், ம்.செல்வி,பி.காஞ்சனா, என்.ஹரி கிருஷ்ணன், ஆர்.எஸ்.மணி, வி.கோபிநாத், ஆனந்த கண்ணன், எஸ்.ரஜினி சுரேஷ், ஜி.முருகானந்தம், எம்.பானுமூர்த்தி, பிரபா, எம்.ஜெயபிரகாஷ், என்.கார்த்திக், வி.ரகு, டி.கேசவன், முல்லை பி.ஆறுமுகம், ரெட்ஹில்ஸ் ஜிங்கா, ராஜேஷ், அழகர், மோகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கழக முன்னோடிகள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment