தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கல்வி மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றியம், செ.புதூர் உயர்நிலைப் பள்ளியில், இன்று சர்வதேச யோகா தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை கோ. தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். மாவட்ட ஜே.ஆர்.சி இணை அமைப்பாளர் ச.கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். தமிழாசிரியர்,க. நேதாஜி அனைவரையும் வரவேற்றார். கும்பகோணம் அறிவுத் திருக்கோயில் பேராசிரியர் அருள்நிதி,ஆர். கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் அருள்நிதி,ஜி. அய்யண்ணன், நல்லாவூர் தவமையப் பொறுப்பாசிரியர் லயன்.அருள்நிதி தங்க. சம்மந்தம் ஆகியோர் இணைந்து சிறப்பாக யோகா பயிற்சி அளித்தனர். ஆறாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை உள்ள 405- மாணவ, மாணவிகளும்,15- ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். யோகாசனத்திற்கு மாணவர்களைத் தயார் செய்யும் விதத்தில், சூடேற்றும் பயிற்சி வழங்கப்பட்டது. பத்மாசனம், வஜ்ராசனம், சூரிய நமஸ்காரம், ஏகபாதாசனம், பிறையாசானம், உட்கட்டாசனம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஆசனங்களையும், பிராணயாமம் உள்ளிட்ட மூச்சுப் பயிற்சிகளையும், மாணவர்களுக்கு வழங்கினர்.
யோகாசனம் செய்வதால் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். மனம் ஒருநிலைப்படும். நினைவாற்றல் பெருகும். ஆதலால், யோகாசனத்தை தினமும் செய்ய வேண்டும் என்று பேராசிரியர்,ஆர். கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டார். விழாவில் வாழ்த்துரை வழங்கிய,எஸ். புதூர் ஸ்கை வெல் ஷைன் லயன்சங்கத்தின் தலைவர், லயன்,ச. ஆனந்த், லயன் சங்கத்தின் சார்பில் பள்ளிக்கு 2 மின்விசிறிகளை வழங்கினார். விருந்தினர்கள் பள்ளியின் சார்பில், நினைவுப் பரிசுகள் வழங்கிக்கொளர விக்கப்பட்டனர். தேசிய பசுமைப்படை ஆசிரியர் லயன்,கி. சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment