மூத்த குடிமக்கள் நலச்சங்கம் மனமகிழ் சங்கமம் சார்பில், மனிதநேய மங்கையர் திலகம் விருது வழங்கப்பட்டது.!
மூத்த குடிமக்கள் நலச்சங்கம் மனமகிழ் சங்கமம், மாதாந்திர கூட்டம், தஞ்சை பெசன்ட் அரங்கில், இன்று(25.6.2024) காலை 10:00 - மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர், வா.செ.செல்வம் தலைமை தாங்கினார், சங்க நிறுவனர்,தமிழ்ச் செம்மல், ஆதி. நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார், மாவட்ட துணைச் செயலாளர் துரை. கோவிந்தராஜ் வரவேற்புரை ஆற்றினார், சங்க பொதுச் செயலாளர், ஆர். பாஸ்கரன் அறிக்கை வாசித்தார்.
கரம்பயம் ஊராட்சி மன்ற தலைவர், திருமதி.மேனகா ஆனந்த்குமார் அவர்களுக்கு "மனிதநேய மங்கையர் திலகம்" என்ற விருதினை, டாக்டர் தாமரைச்செல்வி அவர்களால் வழங்கப்பட்டு பாராட்டுரையாற்றினார், சிலம்பாட்ட மாணவர்களுக்கு சீருடைக்கான தொகையை நன்கொடையாக சங்க பொதுச் செயலாளர்,ஆர். பாஸ்கரன் வழங்கினார்.80- வயதை நிறைவு செய்த சங்கத்தின் துணைச் செயலாளர், எம் சுந்தரராஜ் அவர்களை அனைவரும் பாராட்டி, சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். சிலம்பாட்ட மாணவர்களை தேர்வு செய்து கொடுத்த சிலம்பாட்ட ஆசிரியர், பிரபு அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டப்பட்டது. சங்கத் துணைத் தலைவர், முத்துக்குமரன் நன்றி கூறினார்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment