மத்திய அரசை கண்டித்து ஊத்துக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக நீதிமன்ற புறகனிப்பு.!
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் குற்றவியல் சட்டங்களை சமஸ்கிருதத்திலும் இந்தியிலும் மொழிமாற்றி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படாமல் தன்னிச்சையாக சட்டம் இயற்றியதை கண்டித்தும் வழக்கறிஞர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க வலியுறுத்தியும் ஊத்துக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இரண்டாவது நாள் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற புறக்கனிப்பு செய்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனால் நீதிமன்ற பணிகள் அனைத்தும் முடங்கிய நிலை உள்ளது இதனால் நீதிமன்றத்திற்கு வாய்தா மற்றும் பெயில் எடுக்கவரும் மக்கள் தினறி வருகின்றனர்.
செய்தியாளர் துரை பன்னீர் செல்வம்

Comments
Post a Comment