Skip to main content

குவியம் திரை ரசனைக் கூடுகையின் 46ஆம் நிகழ்வு நடைபெற்றது.!

குவியம் திரை ரசனைக் கூடுகையின் 46ஆம் நிகழ்வு மிகச் சிறப்பாக  நடைபெற்றது. இம்மாத நிகழ்விற்கென இயக்குநர் ஜியோ பேபி இயக்கத்தில் வெளியான 'Kaathal - The Core (2023, Malayalam)' திரைப்படத்தை தேர்ந்து கொண்டிருந்தோம். உரையாடல் படத்தின் உருவாக்கம் குறித்து மட்டுமின்றி, கதையின் மையம் முன்வைக்கிற LGBTQ+ குறித்தும் கிளை பிரிந்தது. திருநங்கைகள், திருநம்பியர் குறித்த சமூக ஏற்பே பல காலத்திற்குப் பிறகு பல கட்டங்களைக் கடந்து சமீப காலங்களில் தான் மெல்ல மெல்ல முன்னேற்றம் காண்கிறது. சூழல் இப்படியிருக்க பால் புதுமையினர்கள் உள்ளிட்டோர் குறித்த சமூகப் புரிதலே பொதுவெளியில் இன்னும் பரவலாக்கப்படாத நிலையில், அவர்களை ஏற்றுக் கொள்ளல் என்பதற்கு இன்னும் காலம் பிடிக்கும். இதுதான் யதார்த்தம். 

கலந்துரையாடலில் ஜியோ பேபி அவர்கள் எடுத்துக் கொண்ட கதையை திரைமொழியில் கையாண்ட விதமே திரைப்படம் குறித்த பேச்சில் மையப்பொருளாக ஆனது. படம் நெடுகிலும் மிக நுட்பமான, கவித்துமான அழகுகளை மிக நேர்த்தியாக ஒளித்து வைத்திருப்பார் இயக்குநர். அதனை உரையாடலின் வழியாக ஒவ்வொருவரும் கண்டதைச் சுட்டிக் காட்டிப் பேசியதும், திறனாய்வு செய்யப்பட்டதும் மிக நல்ல உரையாடல் அனுபவமாக இருந்தது. 

நடிகர்களின் உடல் மொழி, காட்சிகளில் ஓளியின் பயன்பாடு, மம்மூட்டி போன்ற ஒரு நட்சத்திர நடிகர் இது போன்ற படைப்புகளில் பங்களிக்கும் போது அதனால் பொதுவெளியில் உருவாகிற சிறப்பு கவனம், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் character arc திரைக்கதையில் எழுதப்பட்டிருக்கும் விதம், அவர்களுக்குகிடையே உருவாகிற உறவுச்சிக்கல்களை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் என பற்பல அம்சங்கள் உரையாடலின் போது வந்து போயின. மிக நிறைவான இன்னொரு நிகழ்வாக இது அமைந்தது. இந்நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டது கூடுதல் மகிழ்ச்சி என்றனா் ஆகம் கலையகத்தினா்.


செய்தியாளர் அ. ரவி   

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...