தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் பத்திரிகை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம் (26.11.2022) அன்று வடபழனியில் நடைபெற்றது. பத்திரிகை நலன் மற்றும் பாதுகாப்பு , நாளிதழ்கள், பருவ இதழ்கள் உள்ளிட்ட அச்சு ஊடகத்தின் இன்றைய நிலை, பத்திரிகை ஆசிரியர்களின் ஒற்றுமையின் அவசியம், அரசு அடையாள அட்டையின் புதிய விதிகள், பத்திரிகையாளர் நலவாரியம் உள்ளிட்ட பத்திரிகைத்துறை சார்ந்த பல்வேறு ஆக்கபூர்வமான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் செய்யப்பட்டது.
பத்திரிகை ஆசிரியர்கள் வழங்கிய ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் கோரிக்கைகளை வகுத்து மாண்புமிகு தமிழக முதல்வர், மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர், உயர்திரு செய்தித்துறை இயக்குநர் மற்றும் செய்தித்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆக்கபூர்வமான இந்த ஆலோசனை கூட்டத்தில் 100-க்கு மேற்பட்ட பத்திரிகை ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர். ஆலோசனை கூட்டத்தின் கோரிக்கைகள் விரைவில் தமிழக அரசிடம் வழங்கப்படும்.


.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
Comments
Post a Comment