செம்பட்டி அருகே உள்ள சித்தையன்கோட்டையில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதற்கு தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ராஜசேகரன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார், சித்தையன்கோட்டை பேரூராட்சி தலைவர் போதுமணி முரளி, தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) எழுமலையான், ஆத்தூர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) தனி தாசில்தார் நிர்மலாகிரேஸ், மண்டல துணை வட்டாட்சியர் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் வீட்டு மனைபட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 401 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் செம்பட்டி அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டி சேர்ந்த கணவரை இழந்த சண்முகப்பிரியா (வயது 27) என்பவர் மனு கொடுத்தார். அதில் ஆதரவற்ற விதவை சான்று பெற்ற தான் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மனுக்களை கொடுத்தும் அரசு வேலை வழங்கவில்லை. 2 மகள்களுடன் கஷ்டப்படுகிற தனக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மனு கொடுத்தபோது அங்கிருந்த அதிகாரிகளிடம் சண்முகப்பிரியா கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
.jpeg)
Comments
Post a Comment