வடகிழக்கு பருவமழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோழவரம், ஆங்காடு, செம்புலி வரம், பாடியநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளையும், மழை நீரை வெளியேற்ற ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் வி.இராஜாராமன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் முன்னிலையில் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
உடன் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப், சார் ஆட்சியர் (பொன்னேரி), ஐஸ்வர்யா ராமநாதன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜவேல், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அருண்மொழி, பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.குலசேகரன், திரு.அமிர்த மன்னன், துணைப்பெருந்தலைவர் மீ.வே.கர்ணாகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உள்ளனர்.
செய்தியாளர்: சந்திரசேகர்

Comments
Post a Comment