திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. நகராட்சி ஆக இருந்த திண்டுக்கல் 2014ம் ஆண்டு மாநகராட்சியாக அந்தஸ்து பெற்றது. மாநகராட்சியாக அந்தஸ்து பெற்றதே தவிர எந்த அடிப்படை வசதிகளும் மாநகராட்சிக்கு செய்யப்படவில்லை. முக்கியமான ரோடு வசதி மிக மோசமாக உள்ளது. பல ரோடுகள் குண்டும் குழியுமாக இருப்பதால் தொடர்ந்து விபத்துக்கள் நடக்கிறது. பல வார்டுகளில் ரோடுகள் படிக்கட்டுகள் போல் உள்ளது. தொடர்ந்து விபத்துக்கள் நடக்கிறது. பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் பெண்கள் வாகனங்களை ஓட்டும் போது தவறி விழுந்து காயம் அடைகின்றனர்.
பள்ளங்களில் மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. மலேரியா ,டெங்கு உட்பட பல நோய்களும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் திண்டுக்கல் மாநகராட்சி ரோடுகள் படுமோசமாக உள்ளன. மாநகராட்சி நிர்வாகம் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி ரோடுகளை பேட்ஜ் ஒர்க் செய்ய வேண்டும். தற்காலிகமாக பேட்ஜ் வொர்க் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இது குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியம் கேட்டபோது: திண்டுக்கல் மாநகராட்சிகள் மழையால் சேதம் அடைந்த ரோடுகள் கணக்கெடுக்கப்படுகின்றன. அவற்றை சரி செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment