Skip to main content

இயற்கையை கற்பிக்கும் தலைமை ஆசிரியர்... குவியும் பாராட்டுகள்...

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி அடுத்த ஏனாதி மேல்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பரமசிவன் என்பவர் கடந்த பத்தாண்டுகளாக தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளி வளாகத்தில் மருத்துவ குணம் கொண்ட நெல்லி, இலுப்பை, மருதமரம், புளியமரம் உள்ளிட்ட மரங்களை வளர்த்து வருகிறார். மேலும் அபூர்வ வகையான வாகை மரம், வில்வமரம், புங்கைமரம் உட்பட சுமார் 200 வகை மரங்களையும் கடந்த பத்தாண்டுகளாக இவர் வளர்த்து வருகிறார். ஒருகட்டத்தில் தான் சார்ந்த சமூகத்திற்கும் கிராம மக்களுக்கும் ஏதாவது உபயோகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதை தொடர்ந்து பரமசிவன் கடந்த நான்காண்டுகளாக பள்ளி வளாகத்தில் காய்கறி தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார். 




பூச்சிக்கொல்லி மருந்து எதையும் கலக்காமல் இயற்கை முறை விவசாயத்தில் கத்தரி, வெண்டை, பாகற்காய், சிகப்பு முள்ளங்கி, பீட்ரூட், கொத்தவரங்காய், பீர்க்கங்காய், அவரைக்காய் உள்ளிட்ட சத்தான காய்கறிகளை பயிரிட்டு வருகிறார். மேலும் சிகப்பு தண்டுக்கீரை, அகத்திக்கீரை, முருங்கைக்கீரை உள்ளிட்ட சத்துமிகுந்த கீரை வகைகளும் இவரது தோட்டத்தை அலங்கரிக்கின்றது.இயற்கை விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதை கண்டு மனம் கலங்கிய இவர் இளம் தலைமுறையினர் இயற்கை விவசாயத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஓய்வு நேரங்களில் மாணவர்களையும் விவசாயத்தில் ஈடுபடுத்துகிறார்.

இங்கு விளையும் காய்கறிகள் தினந்தோறும் அருகில் உள்ள சத்துணவு கூடத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு உணவாகிறது. மீதமுள்ள காய்கறிகளை தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு கொடுத்தனுப்புகிறார். வருடம் முழுவதும் இது நடந்து வருகிறதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில் தாங்கள் கடைகளில் வாங்கும் பொருட்கள் எந்தவிதத்தில் விளைகிறதோ என தெரியாமலேயே வேறுவழியில்லாமல் உணவுக்கு பயன்படுத்துவதாகவும், ஆனால் இந்த பள்ளியில் இயற்கையான முறையில் பயிராகும் காய்கறிகள் எங்கள் பிள்ளைகள் மூலம் கொண்டு வரப்பட்டு அதை சமைத்து உணவருந்தும்போது மிகுந்த சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக மகிழ்ச்சியையும் தலைமை ஆசிரியருக்கு நன்றியையும் தெரிவிக்கின்றனர். 

மேலும் மாணவர்களுக்கு விவசாயம் குறித்த பாடத்தையும் தலைமை ஆசிரியர் ஆர்வமுடன் கற்றுக்கொடுப்பதையும் பெருமையுடன் கூறுகின்றனர். காய்கறிகள் மட்டுமல்லாமல் மாதுளை, கொய்யா, நாட்டு வாழை, மலை வாழை, கற்பூர வாழை, பப்பாளி, நாவல் உள்ளிட்ட பழவகைகளை வளர்த்து வரும் தலைமை ஆசிரியர் பரமசிவன் அவை அனைத்தையும் மாணவர்களுக்கே கொடுத்து மனநிறைவு கொள்கிறார்.மேலும் இங்கு வளரும் செம்பருத்தி, சூரியகாந்தி, நித்திய கல்யாணி, நந்தியா வட்டை உள்ளிட்ட பூவகைகள் கொண்ட பூந்தோட்டம் காண்பதற்கு மிகவும் ரம்மியமாக மனதை கொள்ளும் வகையில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.மொத்தத்தில் இந்த அரசுப் பள்ளி காய், கனி, பூ என அனைத்தும் நிரம்பிய மினி பிருந்தாவனமாகவே காட்சியளிக்கிறது. 

ஏதோ பள்ளிக்கு வந்தோமா பாடம் நடத்தினோமா வீட்டுக்கு சென்றோமா என சராசரி ஆசிரியராக இல்லாமல் தான் சார்ந்த சமூகத்திற்கு தன்னால் முடிந்த சேவையை சலிப்பில்லாமல் செய்து வரும் தலைமை ஆசிரியர் பரமசிவன் செயல் கிராம மக்களின்  பாராட்டை பெற்றுள்ளது.


செய்தியாளர்: சந்திரசேகர் 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...