செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெண்பேடு ஊராட்சியில் காயார் செல்லும் பிரதான சாலையின் அருகே ஶ்ரீஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோவில் உள்ளது. வாராவாரம் சனிக்கிழமைகளில் இங்கு அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர்கள். இக்கோவிலில் 32அடியிலான விஸ்ரூப ஆஞ்சநேயர் உள்ளது தனிச்சிறப்பாகும்.
இந்நிலையில் இக்கோவில் பிரகாரத்தில் சோளிங்கர் திவ்யதேசத்தில் உள்ள யோகநரசிம்மர், அமிர்தவல்லிதாயார் ,யோக ஆஞ்சநேயர் மற்றும் சீதா ,ரமா ,லட்சுமணன் ஆஞ்சநேநேயருக்கு தனித்தனி ஆலயங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்தநிலையில் அனைத்து பணிகளிலும் நிறைவடைந்ததை தொடர்ந்து நாளை 13.11.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 08.30மணி முதல் 10.30மணிக்குள்ளாக அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடத்தப்பட உள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை 05.00மணியளவில் யாகசாலை மண்டபத்தில் முதல்கால யாகபூஜையுடன் கும்பாபிஷேகத்திற்கான நிகழ்ச்சி துவங்குகிறது. தற்பொழுது ஶ்ரீஜெய்வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான இறுதிகட்டப்பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன. ஆலயத்தொடர்புக்கு: 9940326724 , 9380108785
செய்தியாளர்: மூர்த்தி


Comments
Post a Comment