Skip to main content

புழல் கதிர்வேடு பகுதியில் பூங்கா அமைக்க பூமி பூஜை .

 சென்னை மாநகராட்சி மண்டலம் 3 க்குட்பட்ட புழல் அடுத்த கதிர்வேடு 31 வது வார்டு குடியிருப்பு பகுதியில் உள்ள சீனிவாசா நகர், ஜெய்மாருதி நகர், ரங்கா அவென்யூ ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், மாலை நேரங்களில் குழந்தைகளுடன் விளையாடவும் பொழுதுபோக்கு பூங்கா அமைத்து தர வேண்டி மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபுவிடம் கோரிக்கை விடுத்தனர்.



அதன்படி ,அந்தந்த  வார்டுகளில் நான்கு  இடங்களை தேர்வு செய்து அதில் பொழுதுபோக்கு பூங்கா அமைந்திட  டுபிட்கோ நிறுவனத்தின் மூலமாக  சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  பூங்கா உருவாக்கும் திட்டத்தை  செயல்படுத்தும் விதமாக பூமி பூஜைகள் நடைபெற்றது.

 இந்நிகழ்வில்  மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு காங்கிரஸ் கட்சியின் சர்க்கிள் தலைவர் சந்திரசேகரன் , சமூக ஆர்வலர் பாபு  மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னர் நம்மிடம் பேசிய மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு, இதனை தேர்தல் வாக்குறுதியாக பொதுமக்களிடம் அறிவித்திருந்தேன், அதனை தற்போது நிறைவேற்றியுள்ளேன் எனவும், கூடிய விரைவில் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு  கட்டி முடிக்கப்பட்டவுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என கூறினார்.


செய்தியாளர்: அகமது அலி 


Comments