தென்காசி மாவட்டம் கீழ சுரண்டை பகுதியில் தென்காசி சட்ட மன்ற உறுப்பினர் S.பழனி நாடார் அவர்களுக்கு சொந்தமான SPN சேம்பர், குவாரிக்கு அதிக அளவில் மணல் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. மேலும் மணல் டிராக்டர்கள் அதிக வேகத்தில் மக்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக கொண்டு செல்லப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு.
அவ்வாறு கீழ சுரண்டை பிள்ளையார் கோவில் தெருவில் அதிவேகமாகச் சென்ற டிராக்டர் வாகனம் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த கீழ சுரண்டை தங்கராஜ் அவர்களின் பேரனும் ராஜதுரை அவர்களின் மகனுமாகிய நான்கு வயது சிறுவன் ராஜமுகன் என்பவரின் மீது டிராக்டரின் முன்பக்க டயர் மற்றும் இஞ்சின் டயர் ஏறி இறங்கியதில் சிறுவன் ராஜமுகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து சிறுவனின் உறவினர்கள் சுரண்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர்.
செய்தியாளர்: சந்திரன்

Comments
Post a Comment