திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மீஞ்சூர் அருகே உள்ள வாயலூர் பகுதியில் சாலையில் மாடுகள் சுற்றி திரிவதாகவும், இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு மாடுகளால் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படுவதாக பொன்னேரி சார் ஆட்சியருக்கு புகார்கள் வந்தது. இதன் அடிப்படையில் நேற்று இரவு சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் செல்வகுமார் வாயலூரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சாலைகளில் திரிந்து கொண்டிருந்த பத்து மாடுகளை வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் பிடித்து வாயலூரில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை பட்டியில் அடைத்தனர். மேலும் சம்மந்தப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் உறுதிமொழி அளித்து கால்நடை பாதுகாப்பிற்கான அபராத தொகை இரண்டாயிரம் ரூபாய் செலுத்திய பின்னர் கால்நடை பட்டியில் உள்ள மாடுகளை அவர்களிடம் ஒப்படைக்குமாறு சார் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
செய்தியாளர்: சந்திரசேகர்

Comments
Post a Comment