திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு பிரித்யங்கரா யாகம் நடைபெற்றது. இந்த யாகம் அரக்கர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெறுவதற்காக பராசக்தியால் நடத்தப்படும் யாகம் ஆகும். இந்த யாகத்தில் அனைத்து விதமான பொருட்களும் சுவாகா கொடுப்பது வழக்கமாகும். இந்த யாகத்தை முன்னிட்டு காலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. பின்பு யாகம் சிறப்பாக நடத்தப்பட்டது. அம்மனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள், அபிஷேகம் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரசாதம் பெற்றனர்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment