புழலில் 82.61 கோடியில் அமைக்கப்பட்ட குடிநீர் தேக்க தொட்டியை முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் துறையின் சார்பில் 82.61 கோடி மதிப்பீட்டில் புழல் சூரப்பட்டு புத்தகரம் மற்றும் கதிர்வேடு பகுதிகளுக்கு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு குடிநீர் வழங்கிட குடிநீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, அதனை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
புழல் அம்பத்தூர் சாலையில் அமைந்துள்ள இந்த குடிநீர் தேக்க தொட்டியை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பகுதி செயலாளர் துக்காராம் மண்டல குழு தலைவர் நந்தகோபால் வார்டு மாமன்ற உறுப்பினர்கள் குட்டிமோகன்,சங்கீதா பாபு, புழல் சேட்டு ஆகியோர்கள் குத்துவிளக்கேற்றி தண்ணீர் இறைக்கும் மோட்டாரின் இயக்கத்தை துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் வட்ட கழக செயலாளர்கள் செங்குன்றம் ராஜேந்திரன், விப்ரநாராயனன் மற்றும் குடிநீர் வாரிய திட்ட செயற் பொறியாளர் கலைச்செல்வன் பொறியாளர் பாக்கியலட்சுமி, கற்பகம், பர்வேஸ் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: அகமது அலி

Comments
Post a Comment