திண்டுக்கல் மாவட்டத்தில் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் குறைவாகவும் லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதிகமாகவும் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் தாண்டிகுடி பாச்சலூர்,ஆடலூர், பன்றி மலை உள்ளன. இதுபோல சிறுமலை, அய்யலூர் மலை, கரந்த மலை என மலைகளால் சூழப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் இருக்கும் மக்கள் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர். ஆனால் சமீப காலமாக பலரும் லைசன்ஸ் இல்லாமல் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு வன விலங்குகளை வேட்டையாடி வருகின்றனர். தங்களுக்குள் மோதல் ஏற்படும்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது ஆகிய சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளது. இதை தடுக்க போலீசார் தொடர் ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் அடுத்த சித்தரேவு பகுதியில் போலீசார் வாகன சோதனையில், நாட்டு துப்பாக்கியுடன் டூவீலரில் சுற்றி திரிந்த ராமு,23, சோலை ராஜ்,21, இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment