தென்காசி மாவட்டம், காசி விசுவநாதர் திருக்கோவில் மாமன்னன் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது. மன்னன் பலமுறை வாராணசிக்குச் செல்ல முயன்றும் முடியவில்லையாம். இதனால், மனவருத்ததுடன் இருந்த மன்னனிடம், தேவவாக்கு மன்னா நீ இருக்குமிடத்திலே எனக்கு ஒரு கோயில் கட்டு, அங்கு நான் அருள் பாலிக்கின்றேன்' என்றதாம். அதைக் கேட்ட மன்னன் 15-11-1446-ம் ஆண்டு இந்த கோயிலைக் கட்டத் தொடங்கி 10-6-1467-ல் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தென்காசி கோவில் கட்டி இன்றுடன் 572 வருடம் ஆகிவிட்டது.
செய்தியாளர்: சந்திரன்

Comments
Post a Comment