Skip to main content

புழல் சிறை கைதி மரணம்..!

 


 சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்தவர் சீனிவாசன் என்ற மொட்டை சிவா  ( வயது 36). இவர் சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு, போலீசார் இந்த மாதம் புழல் சிறையில் அடைத்தனர். இவருக்கு இன்று அதிகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனே அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து புழல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்தியாளர்: அகமது அலி 

Comments