Skip to main content

பள்ளி முன்பு மழைநீர் குளம்போல தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதி..!

 தாராபுரம் அலங்கியம் ரோடு அரோபிந்தோ வித்யாலயா பள்ளி முன்பு உள்ள மாநில நெடுஞ்சாலையில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.



அலங்கியம் சாலைக்கு கிழக்கு புறமாக உள்ள நில உரிமையாளர்கள் மழைக்காலங்களில் வழக்கமாக மழைநீர் செல்லும் பாதையை மண்திட்டுகள் அமைத்து தடுத்து விட்டனர். இதனால் மழைநீர் வாய்க்காலை சென்றடைய வழி இல்லாமல் பெரிய குளம்போல தேங்கியுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக அரோபிந்தோ பள்ளி நிர்வாகம் சார்பில் நெடுஞ்சாலத்துறை மற்றும்  வருவாய்த்துறையிடம் பல மனுக்கள் அளித்தும், மழைநீர் தேங்காதவாறு வடிகால் வசதி ஏற்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் பல வாகனங்கள் பழுதாகி நிற்கின்றன. வாகன ஓட்டிகள் தண்ணீரில் விழுந்து செல்கின்றனர். பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிக் குழந்தைகளின் நலன் கருதி மழைநீர் தேங்காதவாறு வடிகால் வசதியை நெடுஞ்சாலைத் துறையும், வருவாய்துறையும் விரைந்து எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


செய்தியாளர்: அருண்குமார் 

Comments