செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேங்கடமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களின் பாதுகாப்புக் கருதி வேங்கடமங்கலம் - அகரம் தென் சந்திப்பு சாலையில், புற காவல் நிலையமும் அதனுடன் இணைந்த கண்காணிப்பு அறையையும் அகரம் தென் சந்திப்பு சாலை, பொன்மார் சாலை, வெங்கட பெருமாள் கோயில், வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 100 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, இன்று தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் திறந்து வைத்தார்.
மேலும் சிசிடிவி கேமராக்கள் இல்லாத முக்கிய இடங்களை கணக்கிட்டு உடனடியாக அப்பகுதியில் சிசிடிவி கேமராக்களை விரைவில் நிறுவ வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் ஆணையர் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கரணை துணை ஆணையர், கேளம்பாக்கம் சரக காவல் உதவி ஆணையர், தாழம்பூர் காவல் ஆய்வாளர் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களை சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணிரவி, (பிஜேபி ஏபிகே.ரகு எம்ஏ .பி.எல் ) மற்றும் சம்பத்குமார், கஜேந்திரன், நாகராஜன் இளங்கோவன் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: மூர்த்தி

Comments
Post a Comment