திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக SP.பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் பட்டிவீரன்பட்டி போலீசார் அண்ணாநகர் பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பிரசாத்(23) என்பவரை கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்து 5,405 லாட்டரி சீட்டுகள், ரூ.18,220 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போலீசார் நடவடிக்கை எடுத்து பறிமுதல் செய்த போதும் விற்பனை நின்ற பாடு இல்லை. இதனால் விற்பவர்கள் குறித்து பட்டியல் போலீசாரிடம் இருந்த போதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment