செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படூர் முதல்நிலை ஊராட்சியில் பாரதியார் தெருவில் இயங்கிவரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இன்று காலை சுமார் 10.00மணியளவில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2022−2023 ஆண்டிற்கான மாணவர்களின் கலைத்திருவிழா துவக்க நிகழ்ச்சி, தலைமையாசிரியர் மகாலட்சுமி தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் டி.மகாலட்சுமி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் வார்டு உறுப்பினருமான கபீர்கான் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்கள். சிறப்பு அழைப்பாளாராக படூர் ஊராட்சி மன்றத்தலைவரும் , படூர் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிர்வாகியுமான கே.ஏ.எஸ்.தாராசுதாகர் கலந்துகொண்டு, பள்ளி மாணவர்களுக்கு இடையேயான 6வகையான பிரிவில் 36வகையான போட்டிகளை துவங்கிவைத்து பார்வையிட்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் பள்ளி கல்விமேலாண்மை குழு உறுப்பினரும் ,08வது வார்டு உறுப்பினருமான ஜெயந்திதசரதன் , 04வதுவார்டு உறுப்பினர் ரேகாசேகர் மற்றும் மேலாண்மைகுழு உறுப்பினர்கள், பெற்றோர்ஆசிரியர் கழக உறுப்பினர்கள் உடனிருந்தனர்கள். 23ந்தேதி முதல் வரும் 28ந்தேதிவரை கலைத்திருவிழாப் போட்டிகள் இப்பள்ளியில் நடைபெறயுள்ளன. 36போட்டிகளிலும் ஒரு மாணவர் மட்டும் வெற்றியாளராக நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். இறுதியாக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அடுத்தகட்டமாக திருப்போரூர் வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்வர். ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டு வருகின்றனர்கள். இந்நிகழ்ச்சிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர்: மூர்த்தி



Comments
Post a Comment