திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதே போல சூறாவளி காற்றுடன் சில இடங்களில் மழை பெய்ததால் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. மின்வயர்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளன. இவற்றை சரி செய்யும் பணியில் மின்வாரியத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இதுகுறித்து பொதுமக்களே மின்வாரியத்தில் புகார் தெரிவித்து வருகிறோம். கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் தேங்கி நிற்கும் மழை நீர்களையும், மின்கம்பங்களையும் சரி செய்யும் பணியை உடனடியாக மின்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment