திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான திருவிழா நடைபெற்றது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுகன்யா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை ஆசிரியர்கள் இளங்கோவன், ரமேஷ் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொண்டாடும் விதமாக குழந்தைகளுக்கு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
பரதநாட்டியம், சிலம்பாட்டம் கிராமிய நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்களது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற மாறுவேட போட்டியில் காந்தி, நேரு, நேதாஜி, பாரதியார் உள்ளிட்ட தேசத்தலைவர்கள் மற்றும் கிருஷ்ணர், ராதா, ஔவையார் வேடமணிந்து வந்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் பார்வையாளர்களை அசத்தினர். இதையடுத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: சந்திரசேகர்

Comments
Post a Comment