திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள அட்சுதா மெட்ரிகுலேஷன் பள்ளி விடுதியில் தங்கி 11ம் வகுப்பு படிக்கும் மாரம்பாடி சேர்ந்த அந்தோணி ராஜ் மகள் மரிய ரோஸ். இவரது தாய் ஸ்டெல்லா அரசு பள்ளி ஆசிரியராக உள்ளார். தந்தை அந்தோணி ராஜ் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாணவி பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தார்.
மாணவி நேற்று இரவு 3 வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைத்தார். பள்ளி ஊழியர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள், போலீசார் என பல்வேறு தரப்பினரும் அந்த பள்ளிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment