நக்கீரன் கோபால் நற்பணி மன்றம் துவக்க விழா முன்னிட்டு 100 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நோட்டு பேணா வழங்கல்..
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பாசார் ஊராட்சியில் நக்கீரன் கோபால் நற்பணி மன்றம் துவக்கவிழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக ஒன்றிய முஸ்லீம் நடுநிலைப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு நிருபர் பாசார் செல்வேந்தின், செந்தில், நிருபர் மருதுபாண்டியன், நிருபர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.அறிவழகன், பிரசாந்த், ராமன், ரமேஷ், நிருபர் ஏழுமலை முன்னிலை வகித்தனர்.
கல்யாணசுந்தரம், ராஜராஜசோழன், வெங்கடேஷ், பிரகாஷ், பிரதீப், மாரி, ராஜா, கார்த்திக் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், தலைமை ஆசிரியர் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டுவைத்து 100 க்கும் மேற்ப்பட்ட மாணவர்களுக்கு நோட்டு பேணா மற்றும் இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் நல்லதம்பி, வெங்கடேசன், குயான்சந்தோஷ், சுதாகர், அஜித்குமார், புகழேந்தி, சின்னையன்,பாஸ்கர், திருவள்ளுவன், சுதாகர், மணிகன்டன், காசிநாதன், மகேந்திரன், ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்,முடிவில் விமல் நன்றி கூறினார்.
செய்தியாளர்: மருது பாண்டியன்

Comments
Post a Comment