Skip to main content

வீட்டிற்கு முன்பாக பழைய இரும்பு வியாபாரி கொடூரமாக வெட்டிக்கொலை..திண்டுக்கல் அருகே பகீர் சம்பவம்!

 திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்த வீரக்கல் அருகே தெற்கு மேட்டுப்பட்டி சேர்ந்தவர் தண்ணி வண்டி (என்ற) சின்னத்துரை (60) இவருக்கு கலையரசி (56) என்ற மனைவியும், கனகராஜ் (36) என்ற மகனும், நாகஜோதி (34) என்ற மகளும் உள்ளனர். பழைய இரும்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை கிராமம் கிராமமாக சென்று வியாபாரம் செய்து வரும், சின்னத்துரை தெற்கு  மேட்டுப்பட்டியில் தனது மனைவி கலையரசியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை மாலை தெற்கு மேட்டுப்பட்டியில் இரண்டு பேர் சின்னத்துரையிடம் தகராறில் ஈடுபட்டு, ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. 




பின்னர், இரவு சுமார் 7 மணி அளவில், சின்னத்துரை வீட்டிற்கு சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் சின்னத்துரை வீட்டு அருகே அவரை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் கழுத்து, தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு, சின்னத்துரை சம்பவ இடத்திலே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பத்தின் போது அவரை தடுக்க சென்று அவரது மனைவி கலையரசியை தாக்க முயன்றனர். அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து, தகவல் இருந்த செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, கொலை செய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு, அது சிறிது தூரம் ஓடிச் சென்று, யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

 கொலையாளிகளை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பேரில், தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும், தெற்கு மேட்டுப்பட்டியில் உள்ள சிசிடிவி  கேமராவை வைத்து கொலையாளிகள் யார் என, அடையாளம் காண போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 கொலை செய்யப்பட்ட சின்னத்துரையின் மகன் கனகராஜ் (36) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது பெரியப்பா வெள்ளைச்சாமி (63) என்பவரை அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஜாமினில் வெளியே வந்த சின்னத்துரை மகன் கனகராஜ் திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்திருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட போலீஸ் விசாரணையில், கொலைக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. செம்பட்டி அருகே நடைபெற்ற இந்த படுகொலை சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


செய்தியாளர்: அரியநாயகம் 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...