திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே சாமியார்புதூரை சேர்ந்தவர் செல்வபிரகாஷ்(29). இவர் ஒட்டன்சத்திரத்தில் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. திருமண வேலைகளில் பிசியாக இருந்ததால் கணக்கு வழக்குகளை நிதிநிறுவன ஊழியர்களிடம் ஒப்படைத்திருந்தார்.
திருமணம் முடிந்து மீண்டும் நிதிநிறுவனத்திற்கு வந்த செல்வபிரகாஷ் வசூல் பணம் குறித்து கேட்டார். அப்போது ஊழியர்கள் அந்த பணத்தை மற்றவர்களுக்கு பைனான்ஸ் கொடுத்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால் அவர்கள் பேச்சில் நம்பிக்கை ஏற்படாததால் ஜெயபிரகாஷ் விசாரித்தார். அதில் பணம் யாருக்கும் கொடுக்காமல் ரூ.59 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.

Comments
Post a Comment